2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சபாநாயகராக வாசுதேவ நாணயக்கார?

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய சபாநாயகர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு இடையில்  கருத்துகள் காணப்படுவதாகவும், அதற்காக தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கு அதிகளவு இடமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலை அடுத்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவிவிலக்கியிருந்தது.

அதனையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடைக்கால அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .