2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பள விவகாரம்: கம்பனிகளுடன் அரசாங்கம் பேச்சு

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பில், தோட்ட நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 23 பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில், உடனடியாக ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாத நிலை நிலவுவதாக, பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் உள்ளிட்ட ஏனைய நிவாரணங்கள் தொடர்பில் இதன்போது அரசாங்க தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளதாக இதன்போது, அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறினார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க முடியும் என, அமைச்சர் நம்பிக்கை ​வெளியிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .