2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

செம்மொழி மாநாடு கொண்டாட்டம்; தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி விளக்கம்

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மொழிக்குச் சிறப்புகள் சேர்க்கும் வகையில் தமிழ்ச் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற வேண்டும். இந்த மண்ணில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் சமதர்மம் கிடைக்க திருவள்ளுவர் சொன்ன மணிமொழியாம் தமிழ்மொழி வழி வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு, நாளை மறுதினம் 23ஆம் திகதி கோவை நகரில் ஆரம்பமாகவுள்ள "உலகத் தமில் செம்மொழி மாநாடு"க்கான விளக்க உரையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அந்த உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் 2004ஆம் ஆண்டில்தான் கிடைக்கப்பெற்றது.
 
இந்தப் பெருமையைக் கொண்டாடும் வகையிலேயே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலுமிருந்து தமிழறிஞர்கள் பலர் வருகை தரவுள்ளனர்.
 
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் துறைத்தலைவராக விளங்கும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
 
அத்துடன், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா எனும் பேரறிஞர் உள்ளிட்ட 49 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 536 தமிழறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றுகின்றனர். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவிலிருந்து மாத்திரம் ஏறத்தாழ 5,000 அறிஞர்கள் பங்கு பெறுகின்றனர்.

இந்நிலையில் இந்தியக் குடியரசுத் தலைவி பிரதீபா பாட்டீல் நாளை மறுதினம் 23ஆம் திகதி காலை இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார். எனவே, அருமைத் தமிழ் மக்களே! கோவை மாநகர் நோக்கி வருக வருக என அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்’’என்று தனது உரையில் கலைஞர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X