2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சர்வதேச பயிற்சி நெறி

Niroshini   / 2015 நவம்பர் 17 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான சர்வதேச பயிற்சி நெறி இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு கலதாரி சுற்றுளா விடுதியில் ஆரம்பமானது.

'உயிர்வாயுக் கண்டுபிடிப்பு பயனுள்ள வளர்ச்சிக்கு இட்டுச் செல்கின்றது' எனும் தொனிப் பொருளில் இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் இலங்கையில் இடம்பெறவுள்ள இந்த சர்வதேசப் பயிற்சிப்பட்டறை நிகழ்வில் அவுஸ்திரேலியா, இலங்கை, சீனா, இந்தியா, பங்காளதேஸ், நெதர்லாந்து, கம்போடியா, அமெரிக்கா, சமோவா ஆகிய நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

ஐரோப்பிய யூனியனின் நிதி அனுசரணையோடு சுவிற்ச் ஏசியா எனும் இந்தத் திட்டம் ஜனதாக்ஸன் மற்றும் பீப்பிள் இன் நீட்  ஆகிய நிறுவனங்களினால் அமுல்படுத்தப்படுவதாக ஜனதாக்ஸன் நிறுவனத்தின் தொடர்பாடல் அதிகாரி செனசியா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறிய மற்றும் பெரிய அளவிலான உயிர்வாயுத் தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான சர்வதேச பயிற்சிப் பட்டறையில் இலங்கை உட்பட சர்வதேச நாடுகளிலிருந்து சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உயிர்வாயு தொழில்நுட்பம் பற்றி விழிப்புணர்வூட்டும் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு அங்கமாக இந்தப் பயிற்சி இடம்பெறுகிறது.

உயிர்வாயு தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்கான திட்டமொன்றை தேசிய மற்றும் மாகாண ரீதியில் அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் பயிற்சிப் பட்டறைகளும் அமர்வுகளும் நடத்தப்பட்டு வருவதாக பயிற்சி வளவாளரும் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளருமான அனுலா அன்ரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X