2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சேறு பூச வேண்டாம் விவாதிக்க வேண்டும்’

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் அரசியல் சேறுபூசும் நிலைமையிலிருந்து மீட்டெடுத்து, அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பில் விவாதம் செய்யும் ஓர் இடமாக மீண்டும் மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதெனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளியாகியுள்ள ஒலிப்பதிவுகளை கேட்கின்ற போது, நீதிமன்றங்களுக்கு அரசியல் ரீதியில் எவ்வாறான அழுத்தங்களை கடந்த அரசாங்கம் பிரயோகித்துள்ளது என்பது அம்பலமாகியுள்ளது என்றார். 

“கடந்த ஆட்சியின் போது வழங்கப்பட்ட தீர்ப்புகளை எவ்வாறு ஏற்றுக்கொள்வதென மக்கள் எங்களிடத்தில் வினவுகின்றனர் எனத் தெரிவித்த அவர், நீதிமன்றத்தின் மீதான தாக்குதல்களின் பெறுபேறுகள் படுபயங்கரமானவையாகும் என்றார். 

அலரிமாளிகையில் நேற்று (09) இடம்பெற்ற, பத்திரிகைகளின் பிரதான ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

நீதிமன்றங்களின் சுயாதீனத்தை பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடத்தில் உள்ளது. நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை இல்லாமல் போவது, நாட்டுக்கு பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்குமெனத் தெரிவித்துள்ள அவர், நீதிமன்றங்களினால் வழங்கப்படும் ஒவ்வொரு தீர்ப்பையும் சந்தேகக் கண்கொண்டுபார்க்கும் நிலைமையே சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்றார். 

19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, அந்தச் சட்டமூலத்திலிருந்த ஒருபகுதியை நீக்கிக்கொண்டமையால், தற்போது பாரிய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .