2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘சுப்பிரி’ என்றோர் அமைச்சர் இல்லை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரி அமைச்சர் என்றோர் அமைச்சர் இல்லை. முதலில் அந்தப் பெயரை நீக்கவேண்டும் என்று தெரிவித்த உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இந்தப் பெயர் சில ஊடகங்களினாலும் சில அரசியல் வாதிகளினாலும் உருவாக்கப்பட்டவையாகும் என்றும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலாளர் காரியாலயம் மற்றும் மாவட்ட பதிவாளர் காரியாலயம் ஆகியவற்றை நேற்றுத் திறந்துவைத்ததன் பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“சுப்பிரி அமைச்சர் என்ற வார்த்தைப் பிரயோகமே தவறானதாகும்.அப்படியோர் அமைச்சர் இல்லை. நாட்டின் அபிவிருத்தியை துரித கதியில் முன்னெடுப்பதற்கே, அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

“இந்தச் சட்டமூலம் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

“கொழும்பு முறை என்றொரு முறைமை இருந்தது. பின்னர், சுதந்திர வர்த்தக வலயம் என்றொரு முறைமை இருந்தது. நாட்டின் அபிவிருத்திக்காக அவ்வப்போது இயன்றளவு சிற்சில சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன” என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X