2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிவனொளிபாத மலையின் பருவகாலம் ஆரம்பமானது

Kogilavani   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், காமினி பண்டார

சிவனொளிபாத மலையின் பருவாகலம், இன்று அதிகாலை 3 மணிக்கு ஆரம்பமானது. இரத்தினபுரி பெல்மதுலை கல்பொத்தாவெல ரஜமகா விகாரையிலிருந்து, திங்கட்கிழமை எடுத்துவரப்பட்ட  சமன் தெய்வம் விக்கிரகங்கள்,இன்று அதிகாலை முன்று மணிக்கு, சிவனொளிபாத மலையை  வந்தடைந்தது.

சமன் தெய்வ  விக்கிரகங்களை,  பெக்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர் பிரதிஷட்டை செய்து வைத்ததுடன், சிவனொளிபாத மலைக்கான பருவகாலம் ஆரம்பமானது.

இதன் ஆரம்ப  நிகழ்வில்,  ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க உட்பட பெரும் திரளான யாத்திரிர்கள்  கலந்துகொண்டார்

இப்பருவகால யாத்திரையானது,  ஆறுமாதங்களுக்கு நீடிக்கவுள்ளது.

யாத்திரிகளின் நலன் கருதி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் ரயில் மற்றும் விசேட பஸ் போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருவகால யாத்திரையை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள்,  பொலித்தீன் மற்றும் கழிவுகளை,  குப்பைத் தொட்டிகளில் போடுமாறும் காசல்ரீ மவுசாகலை நீர்தேக்கங்களில் நீராடுவதை தவிர்க்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன், மதுபானம் அருந்திவிட்டு அல்லது மதுபான போத்தல்களை  கொண்டுச் செல்வதும் தவிர்க்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .