2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு இந்தியா பாராட்டு

Editorial   / 2019 நவம்பர் 30 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்புமுனை என, இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ராஷ்டிர பவனில் நேற்று(29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட இராப்போசன விருந்தின்போதே, இந்திய ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தைப் பாராட்டியுள்ள இந்திய ஜனாதிபதி, அனைத்து துறைகளின் துரிதமான முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .