2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 மே 12 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி இராணுவத்தினரிடம் உத்தரவிட்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகா  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தார் என அரச சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக்கொடிகளை ஏந்தி இராணுவத்தினரிடம் சரணடையவந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக தான் அறிந்துகொள்ள முடிந்தது என ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு செவ்வி வழங்கியிருந்த ஜெனரல் பொன்சேக்கா தெரிவித்திருந்தார்.

இந்தத் தகவல் தொடர்பான முறைப்பாட்டில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேக்கா இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் விடுத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில் ஜெனரல் சரத் பொன்சேக்காவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிரதான நீதவான் சம்பா ஜானகி ராஜரட்ன, இராணுவத் தளபதிக்கு அறிவித்தல் அனுப்பியிருந்தார்.
 
பிரிதொரு குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேக்கா தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இராணுவத் தளபதிக்கு அறிவித்தல் அனுப்புமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.

இந்நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பின் பேரில் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ வெற்றியின் நாயகன் என்றபடியால் அதற்கு முன்னுரிமை வழங்கி அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு நீதிவான் இரகசிய பொலிசாருக்கு உத்தரவு  பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .