2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஜெயராஜ் கொலை வழக்கு: ஏப்.25 முதல் விசாரணை

Kanagaraj   / 2015 நவம்பர் 24 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே உள்ளிட்ட 13 பேரைப் படுகொலை செய்தமை மற்றும் 31 பேருக்குப் படுகாயங்களை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி முதல் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

இந்தச் சம்பவம், 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதியன்று, வெலிவேரிய காந்தி விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இடம்பெற்றது.

இந்த வழக்கு, கம்பஹா மேல் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே நீதிபதி பியசீலி விக்ரமசிங்க மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் உதவி பொலிஸ் அதிகாரி லக்ஷ்மன் குரே, செல்வராஜட் பிலுபாகரன் மற்றும் தம்பையா பிரகாஸ் ஆகியோரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .