2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கிளங்கனுக்கு மாற்றம்

Kogilavani   / 2017 ஜூன் 11 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

 

ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் மேலதிக சிகிச்சைக்காக, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனிடம் வாக்மூலங்களை பெற்றப்பின்பே, ஆசிரியரை கைதுசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென்றும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் - சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில், தரம் 10இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை (9) ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

நோர்வூட் சென்ஜோன்டிலரி தோட்டத்தைச் சேர்ந்த அமரேசன் வினுஷான் என்ற மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆங்கிலப் பாட ஆசிரியர் ஒருவர்,  மாணவர்களுக்கு பயிற்சியை  வழங்கியுள்ளர். இதன்போது, குறித்த மாணவன், ஆசிரியர் வழங்கிய பயிற்சியை இரண்டாவது முறையாகவே செய்து காட்டியுள்ளான்.  இதனால் ஆத்திரம்கொண்ட ஆசிரியர்,  மாணவனின் தலையை  பிடித்து கதிரையில் மோதியுள்ளதுடன் மாணவனின் முதுகில் கைகளால் குத்தியுள்ளதாக, மாணவனின் பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான மாணவன் நோய்வாய்ப்பட்ட நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோர், இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலைக்கு அண்மித்திருந்த பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடை பதிவுசெய்தனர்.

மேற்படி மாணவன் நோர்வூட்டு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணவன் என்பதால், முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொகவந்தலாவை பொலிஸார்,  அதனை நோர்வூட் பொலிஸாருக்கு மாற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X