2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தனியார் துறையினருக்கு இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 11 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

சேவையாளர்களின் வரவு - செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.
 
வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முதலாவது கட்டம் 

* மாதாந்தம் 40,000க்கு குறைந்த சம்பளத்தைப் பெறுவோருக்கு 1,500 ரூபாய் சம்பள அதிகரிப்பு.

* 1ஆம் கட்ட சம்பள அதிகரிப்பு, 2015 மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும். 

* நாளொன்றுக்கு 1,600 ரூபாய் சம்பளத்துக்குக் குறைவாக சம்பளம் பெறுவோரின் சம்பளம், நாளொன்றுக்கு 60 ரூபாவினால் அதிகரிக்கப்படும். 

* துண்டு முறைமையின் பிரகாரம் சம்பளம் பெறுவோர், சம்பளத்துக்கு மேலதிகமாக 15 சதவீதம் பெறுவர். (இதுவும் 2015 மே 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்) 

* 40,000 ரூபாய் வரையறையில் அல்லது 41,500 ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெறுவோர் 1,500 ரூபாய் அல்லது 1,500 ரூபாய்க்கு குறைவான சம்பள அதிகரிப்பை பெற்று மாத சம்பளம் 41,500 ரூபாவைப் பெறுவர். 

* மாதாந்தம் சம்பளம் 41,500 ரூபாவாக இருந்தால் சம்பளம் அதிகரிக்கப்படாது.

இரண்டாம் கட்டம்

* வரவு-செலவுத் திட்ட நிவாரண கொடுப்பனவான 1,000 ரூபாய், 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் கிடைக்கும்.

* இதன்பிரகாரம் நாளாந்தம் சம்பளம் பெறும் (நாள் சம்பளம்) 40 ரூபாய் கிடைக்கும்.

* துண்டு முறை மூலம் சம்பளம் பெறுவோரின் சம்பளம், 10 சதவீத அதிகரிப்புடன் கிடைக்கும்.

இதேவேளை, இரண்டு கட்டங்களாக சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் சம்பள நிலுவை வழங்க வேண்டுமாயின், அந்த நிலுவைச் சம்பளம் 12 கட்டங்களாக வழங்கப்பட வேண்டும். தனியார் துறையினரின் சம்பளத்தை 2015ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என்று அரசாங்கம் அதிகரித்தமையால் சம்பள அதிகரிப்பு அன்றைய தினத்திலிருந்தே அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X