2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தபால்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2016 மார்ச் 25 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால்அலி

தபால் சேவையை மேலும் நவீனப்படுத்தும் நோக்கில் யப்பான் நாட்டு உதவியுடன் தபால் சேவையாளர்கள் மின்சார துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்தி காகிதம் மற்றும் பொதிகளை வழங்கும்  வகையிலான வேலைத் திட்டம் ஒன்றை நாடுபூராகவும் மேற்கொள்வுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

தபால் சேவையை மேலும் நவீனப்;படுத்தும் திட்டத்தின் கீழ்,  தபால் சேவையாளர்கள் தங்களுடைய காகிதம் பொதிகள்  விநியோகங்களை இலகுவான முறையில் மேற்கொள்வதற்காக மின்சார துவிச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவதற்கு நாடுபூராகவும் மேற்கொள்வதற்கு திட்டம் மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் தபால் துறை மற்றும் முஸ்லிம் சமய கலாசாரத்துறை அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (24)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் யப்பான் நாட்டின் ஈ மினிகோ நிறுவனத்தின் பிரதிநிதி கென்ஜி பூஜிகி  அமைச்சின் பதில் செயலாளர் ஏ.எஸ்.ஏம்.எஸ். மஹனாம, தபாலதிபர் டீ.எல்.பீ.ஹோஹன அபேவர்தன அமைச்சின் அந்தரங்கச் செயலாளர் எம்.எச்.ஏ.பாஹிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .