2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழ்ச்செல்வனின் குடும்பம் இந்தியாவில் அரசியல் புகலிட கோரிக்கை-கருணா

Super User   / 2010 மே 11 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைந்த முன்னாள் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவுக்கு அரசியல் புகலிடம் கோரிச்செல்வதற்கு இராணுவத்தினரிடம் அனுமதி கோரியிருப்பதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப்பட்ட தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் தற்போது இராணுவத்தினரின் பாதுகாப்பில் தங்கவைக்கட்டிருக்கின்றனர்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினரை இராணுவத்தினர் நன்றாக பராமரித்துவருவதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவுக்குச் செல்வதற்கான அனுமதி கோருவதாகவும்,  அவர்களது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் போராளிகள் அல்ல என்பதுடன், அவர்கள் பொதுமக்கள் எனவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டினார். அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு தான் கொண்டுசெல்லவிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இதேவேளை, புனர்வாழ்வளிப்பதற்காக புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களில்  1500 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர்,  எனினும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் இராணுவத்தினரின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.





You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 11 May 2010 09:18 PM

    தமிழ்செல்வனுடைய குடும்பத்தினர் புலி ஆதரவாளர்கள் அல்லர் என்று வி.முரளிதரன் அபிப்பிராயப்படுகின்றார். சாதாரண பொதுமக்கள் என்றால் இந்தியாவுக்கு போக அனுமதிப்பதில் பிரச்சினை இல்லையே! இந்தியாவிலிருந்து மேற்கே சென்று நாங்கள் புலி ஆதரவாளர்கள்தான் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படியாவது இங்கிருந்து போனால் போதும் என்று நினைக்கிறவர்கள் இந்தியாவிலிருந்து இங்கு வர துடிக்கின்றார்களே அவர்களைப்பற்றி என்ன சொல்கிறார்கள். எல்லாரும் உயிர்ப்பணயத்தில் படகுப்பயணிகளாக போய் இறந்து போகும் அபாயம் உள!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .