2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொழில் பெற்ற முன்னாள் போராளிகள் கைதிகளாக நடத்தப்படுகின்றனர்-த.தே.கூ

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பாகங்களிலும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்புடனேயே கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.

இதனால் அனைத்து தரப்பினரது பார்வையிலும் இவர்கள் கைதிகளைப் போன்றே தென்படுகின்றனர் என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எனவே, புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள இந்த முன்னாள் போராளிகளின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு அரசாங்கம் வழிசமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர்கள் 500 பேருக்கு ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பினை வழங்கும் முகமாக நேற்று கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கு கொழும்பிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் உணவுடன் கூடிய தங்குமிட வசதி செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகத்  தெரிவிக்கப்படுகிறது.
 
6 மாதகாலம் தையல் பயிற்சி பெற்ற யுவதிகளுக்கே இவ்வாறு அரசாங்கத்தினால் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பம்பைமடுவிலுள்ள சரணடைந்த பெண் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 300 பேரும், பூந்தோட்டத்திலுள்ள பெண்களுக்கான புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 200 பேருமாக மொத்தம் 500பேர்  இந்த வேலை வாய்ப்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .