2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தாவியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது கட்சியில் இருந்து விலகி ஏனைய கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இதற்கு முன்னர்  ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 

ஆதரவளித்த இருவர் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜிதமுனி சொய்சா, லக்ஷமன் செனவிரத்ன மற்றும் இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் 

இதற்கு முன்னர் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்திருந்தனர்.

அதேவேளை, எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அண்மையில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .