2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நெடுங்கேணியில் கமநல திணைக்களம் அமைச்சர் பசில் இன்று அடிக்கல் நாட்டினார்

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோர் வவுனியாவின் மீள்குடியேற்ற கிராமமான நெடுங்கேணிக்கு இன்று விஜயம் செய்தனர்.

உலக வங்கியின் நிதி உதவியுடன் என்ரிப் திட்டத்தின் கீழ் நெடுங்கேணியில் புதிதாக கட்டப்படவுள்ள கமநல திணைக்கள அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டுவதற்காகவே இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

 உலக வங்கியின் குழுவினர், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி,வவுனியா மாவட்ட அரச அதிபர் மற்றும் சிரேஷ்ட உயரதிகாரிகள் பலரும் இந்நிக நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து நெடுங்கேணி வைத்தியசாலைக்கும் நியாப் வேலைத்திட்ட அலுவலகத்துக்கும் சென்ற அமைச்சர்கள் அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன் நெடுங்கேணி பிரதேச செயலகத்திலுள்ள பொதுமக்கலுடன் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளதுடன் அதன்போது குறித்த மக்களின் பிரச்சினைகள் அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .