2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

24 மாவட்டங்களை மையமாகக் கொண்டு எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொலிஸ் மற்றும் கடற்படையின் ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனை, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மழைக் காலங்களில் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் முதலாம் திகதியிலிருந்து ஒரு வாரத்துக்கு இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 16,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X