2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை மறுதினம் (07) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை முன்னிட்டு மேல் மாகாணத்தை  மய்யமாகக் கொண்டு கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்புப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதன்போது, 96,351 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 19,825 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 423 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வருடத்தின் கடந்த 4 நாட்களில் மேல் மாகாணத்தில் 485 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .