2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘நீர்ப் பாவனைக் கட்டணம் நிலுவையில் இருந்தால் இணைப்புத் துண்டிக்கப்படும்’

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

 

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று காரியாலயத்துக்குட்பட்ட பகுதிகளில், 3 மாதங்களுக்கு மேல் மாதாந்த நீர்ப் பாவனைக் கட்டண நிலுவையைச் செலுத்தாத நீர்ப் பாவனையாளர்களின் இணைப்புகள் துண்டிக்கப்படவுள்ளனவென, அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் கே.என். கரீம், இன்றுத் (23) தெரிவித்தார்.

 

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட அக்கரைப்பற்று, கல்முனை, மருதமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், இறக்காமம் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலேயே, இந்த நீர்த் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பிரதேசங்களில் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் நிலுவைத் தொகை மற்றும் பாவனையின் அளவு போன்றவற்றைக் கருத்திற்கொண்டே இணைப்புத் துண்டிக்கப்படவுள்ளதாகவும், குறிப்பிட்ட தொகை நிலுவையைச் செலுத்தாமல் உள்ள வாடிக்கையாளர்கள், தமது நீர்க்கட்டணத்தைச் செலுத்தி, அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நீர்த் துண்டிப்புச் செய்யப்படும் வாடிக்கையாளர், நீர்க்கட்டணப் பட்டியல் தொகையுடன் அபராதப் பணத்தையும் முழுமையாகச் செலுத்திய பின்னரே, மீளிணைப்பு வழங்கப்படுமெனவும், பிராந்திய முகாமையாளர் கே.என். கரீம் தெரிவித்தார்.

 நீர்த் துண்டிப்பு அபராதத் தொகை, 1,900 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X