2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நல்லிணக்கப் பொறிமுறையில் கணினித் தொகுப்பு வழி விசாரணை

Princiya Dixci   / 2016 மார்ச் 17 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமரினால் நியமிக்கப்பட்ட 'நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை செயலணி', நல்லிணக்கப் பொறிமுறையின் அமைப்பு பற்றிய நிபுணர்களின் பங்குதாரர்களான பொதுமக்களின் கருத்தைப் பெறும் நோக்கில் கணினி இணைப்பு வழி வாக்கு மூலத்துக்கு வழியமைத்துள்ளது. 

அரசாங்கம் திட்டமிட்டுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளில் காணாமல் போனோருக்கான ஓர் அலுவலகம், உண்மை, நல்லிணக்கம், நீதி, மீள்நிகழாமை, ஆணைக்குழு, பொறுப்புக் கூறல் முறைமை மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பன அடங்குகின்றன. 

நல்லிணக்கப் பொறிமுறைகளை இணைப்புச் செய்வதற்கான அலுவலகத்தின் மும்மொழி இணையத்தளமான www.scrm.gov.lk இல் கணிணி இணைப்பு சாட்சியமளிப்பு கேள்விக்கொத்து உள்ளது. 

கணினி வழி சாட்சியமளிப்புக்கு மேலதிகமாக சகல மாவட்டங்களிலும் நேரடிக் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X