2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாவலப்பிட்டி தாக்குதல்;ஜனாதிபதியிடம் விசாரணை அறிக்கை கையளிப்பு

Super User   / 2010 மே 02 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டியில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

16ஆவது சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பூட்டான் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாடு திரும்பிய பின்னர் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

நாவலப்பிட்டியில் தேர்தல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்த எந்த உறுப்பினருக்கும் தனது புதிய அமைச்சரவையில் பதவி வழங்கப்படமாட்டாது என மஹிந்த ராஜபக்ஸ முன்னர் அறிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, நாவலப்பிட்டியில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .