2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பசிலின் அடிப்படை மனு ஜூனுக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2016 மார்ச் 28 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு, ஜூன் மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றையதினம், உண்மைகளை உறுதிப்படுத்துமாறு, உயர்நீதிமன்றம் நேற்றுத் திங்கட்கிழமை தீர்மானித்தது.

தன்னை மீண்டும் கைதுசெய்வதை தடுக்கும் வகையில் கட்டளையைப் பிறப்பிக்குமாறுகோரியே மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

திவிநெகும திணைக்களத்தில் நிதிமுறைக்கேடுகள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி உள்ளிட்ட பொய்யான குற்றச்சாட்டுகள் பலவற்றுக்கு பிரதிவாதியாக்கி, தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கம்பஹா, கடுவெல மற்றும் பூகொடை ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் ஊடாக, தன்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அது தன்னுடைய அடிப்படை உரிமையை மீறுவதாக அமைந்துள்ளது என, அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த மனு, பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் அனில் குணரத்ன மற்றும் கே.டி சித்ரசிறி ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் நேற்றையதினம் ஆராயப்பட்டபோதே, அந்த நீதியரசர்கள் குழு மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.  
மனுவை ஆராய்வதற்கு இன்னும் காலஅவகாசம் தேவைப்படுவதாக, மனுதாரரான பசில் ராஜபக்ஷவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அதனையடுத்தே, மனுவை ஆராய்வதற்கான திகதியாக ஜூன் 08ஆம் திகதி குறிப்பிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .