2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாடசாலையில் காணப்படும் டெங்குவுக்கு அதிபர்களே பொறுப்பு

Yuganthini   / 2017 ஜூலை 20 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளில் டெங்கு ஏற்படுவ​தைத் தடுப்பது தொடர்பிலான பொறுப்பு அதிபர்களையே சார்ந்தது. அதனால் இவ்விடயம் தொடர்பிலான ஆலோசனைகளை  அதிபர்களுக்கு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக, நாட்டிலுள்ள எல்லாப் பாடசாலை அதிபர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு கல்வி அமைச்சின் செயலாளருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு தொடர்பாக, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தலைமையில் இன்று (20) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது மழை பொழிவதனாலும் எதிர்வரும் காலங்களில் மழை பொழிவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதனாலும் இத்தகைய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .