2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பாணின் விலை 4 ரூபாவால் அதிகரிப்பு

Super User   / 2010 ஜூன் 23 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இதுவரை காலமும் 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு இறாத்தல் பாண், இன்று நள்ளிரவு முதல்  44 ரூபாவாக விற்பனை செய்யப்படவிருக்கிறது.

கோதுமை மாவின் விலை நேற்று அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே,  பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார்.

ஒரு கிலோ பிரீமா கோதுமை மாவின் விலையை  10 ரூபா 50 சதத்தால் நேற்று அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 63 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ  கோதுமை மா,  ரூ.73.50 சதமாக தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை,  400 கிலோகிராம் நிறையுடைய பால் மா பைக்கற்றின் விலையை 14 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் நிறையுடைய பால் மா பைக்கற்றின் விலையை 48 ரூபாவினாலும் கடந்த வாரம் அதிகரித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .