2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பத்திரிகையாளர் வித்தியாதரன் வடமாகண சபை தேர்தலில் போட்டியிடுவாரா?

Super User   / 2010 ஜூன் 14 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

EXCLUSIVE எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கு தான் தயார் என சுடர் ஒளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் என்.வி.வித்தியாதரன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரான வித்தியாதரன் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக தமிழ்மிரர் இணையதளத்தளத்திற்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த வாரம் இது சம்பந்தமாக இலங்கையில் உள்ள சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் தன்னை சந்தித்து சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் இறங்க வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்வரும் வடமாகண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் படி வேண்டினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தயார் என்றால் தான் போட்டியிட தயார் என்றேன்.

இந்த விடயம் சம்பந்தமாக அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி சாதகமான பதில் தருவதாக கூறினார்கள். அவர்களின் பதிலை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களுடன் இருந்து மிகவும் கஷ்டப்பட்டவன் என்ற வகையில் வடமாகண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட  பொருத்தமானவன் என நினைப்பதாக  ஊடகவியலாளர் வித்தியாதரன்  தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.(R.A)

.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .