2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முந்தலில் மீட்ட சடலத்தை பொறுப்பேற்க இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், முந்தல் கடற்கரைப் பகுதியில் கடந்த 27ஆம் திகதி  கண்டெடுக்கப்பட்ட இந்திய இளைஞரின் சடலத்தை பொறுபேற்பதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

குறித்த சடலத்தை உறவினர் பொறுப்பேற்கும் வரையில், அதனை வைத்து பாதுக்காப்பதற்கான போதியளவு வசதி தம்மிடம் இல்லை என்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

புத்தளம், முந்தல் கடற்கரைப் பகுதியில் கப்ரக வாகனமொன்றில் குறித்த இந்திய இளைஞரின் சடலத்தை இரு நபர்கள்  கொண்டு வந்து வீச முற்பட்டிருந்த வேளையில் இதனை  அப்பகுதி மக்கள் அவதானித்திருந்தனர்.

இந்நிலையில்,  மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்திற்கு அப்பகுதி மக்கள்  அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து,  குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதம அதிகாரியும்  மற்றுமொரு நபரும் புத்தளம், முந்தல் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .