2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

புதிய அமைச்சர்களை அடக்கி வாசிக்குமாறு ஜனாதிபதி அறிவுரை

Editorial   / 2019 நவம்பர் 22 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் பதவியேற்கவுள்ள புதிய அமைச்சர்கள், ஜனாதிபதித் தேர்தலின் போது தான் முன்வைத்த கொள்கைப் பிரகடனங்களை மாத்திரம் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிக்க வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் புதிய அமைச்சரவை, சிறியதோர் அமைச்சரவையாகக் காணப்படுவதால், கொள்ளைக் பிரகடனங்க​ளை நிறைவேற்றுவது குறித்து மாத்திரம் பெருமளவில் அவதானம் செலுத்துமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் வரையில் அமையவுள்ள இந்தக் குறுகியகால அர​சாங்கத்தின் போது, வேலைவாய்ப்புகளை வழங்குவதிலிருந்து விலகியிருக்குமாறும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்துப் பணியாற்றும் வகையில் செயற்படாதிருக்குமாறும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனால், பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரையில், ஜனாதிபதித் தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனங்களை நிறைவேற்றும் பணிகளையும் யோசனைகளையும் முன்னெடுக்குமாறும், ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்தியுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .