2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதிய கூட்டாட்சிக்கு முயற்சி

Yuganthini   / 2017 ஜூலை 17 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்  -படுத்துக்கின்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், அரசாங்கத்திலிருந்து விலகினால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு, புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களே, மேற்கண்ட முயற்சியில் களமிறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   

புதிய கூட்டாட்சிக்காக, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன், இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகின்றது.   

கடந்த தேர்தல்களின்போது, மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரண்டு தலைவர்களின் நோக்கமாகும். அதற்காக, தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை இன்னும் மூன்று வருடங்களுக்கு கொண்டுசெல்வதே, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நோக்கமாக உள்ளது.  

இவ்விரு தலைவர்களினதும் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைப்பதற்காக, அரசாங்கத்தில் இருக்கின்ற சிலர், உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்டம் காணவிடாது, ஆட்சியைக் கொண்டுசெல்வதற்கு தேவையான, பெரும்பான்மையைக் கவனத்தில் கொண்டே, மேற்படி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .