2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாதாள உலகக்கோஷ்டியினர் வெளிநாடுகளில் புகலிடம்-பொலிஸார்

Super User   / 2010 மே 21 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலை மற்றும் கப்பம் கோரல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் தேடப்பட்டுவரும் பாதாள உலகக் கோஷ்டியினர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று அங்கு அவர்கள் அரசியல் புகலிடம் கோரிவருவதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பித்துக்கொண்ட குடுலால், ராஜாப்தீன், பஹ்யா,திகா பைஸர் ஆகியோர் இவ்வாறு வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோருவதாகக் கூறிய பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் , இவர்களில் பிரதி அமைச்சர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தவர்  என்று நன்கறியப்பட்ட குடுலால் என்பவர் இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறி பிரிட்டனில் அரசியல் புகலிடம் கோரியிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் இந்தக் குற்றவாளிகள் தற்போது இந்தியா, பிரிட்டன், டுபாய் போன்ற நாடுகளில் தங்கியிருப்பதாகவும், இவர்களைக் கைதுசெய்வதில் சிரமம் காணப்படுவதாகவும் அந்தத் தகவல்கள் கூறியுள்ளன.

யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், அரசாங்கம் பாதாள உலகக் கோஷ்டியினரின் செயற்பாட்டை முடக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எனினும், நாட்டை விட்டுச் சென்ற குற்றவாளிகள் சிலர் பொய்யான தகவல்களை வழங்கி அரசியல் புகலிடம் கோரியிருப்பதாகவும் பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 22 May 2010 07:45 PM

    பாதாளஉலகம் என்றால் என்ன?இப்போது நன்றாக புரிகிறது, அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட-அவர்களது தற்பாதுகாப்புக்கு என்று-ஆயுதத்தோடு பயிற்றப்பட்ட ஆட்களே இவர்கள். தேவைப்பட்டால் இவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தேவைப்பட்டால் பாதுகாப்பாக வெளிநாடும் செல்வர். இராஜதந்திர கடவுச்சீட்டு இல்லாவிட்டால் இவர்கள் பயங்கரவாதத்தோடும் உள்நாட்டு கலகங்களிலும் தொடர்புடையவர்களாக அறிக்கை இடப்படுவர். ஆட்சி மாறினாலோ பொலீஸ் தலைமைகள் மாறினாலோ துணைப்படையினர் & பொலீசுக்கு தகவல் தருவோர் பாதாளமாகி இறப்பர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .