2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாம்பு தீண்டி பெண் மரணம்; பாம்பு மயக்க நிலையில்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 06 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தென்மராட்சி வரணி கரம்பைக்குறிச்சியில் படுக்கையிலிருந்த பெண்ணை பாம்பு தீண்டியதில் பெண் மரணமானார்.

அவரைக் கடித்த கருவேலன் கண்டல் என்னும் 3 அடி  நீளமான பாம்பு அவர் அருகிலேயே மயங்கிய நிலையிலிருந்து மீட்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு படுக்கையிலிருந்த குறித்த பெண் பாம்பினால் தீண்டப்பட்ட நிலையில், அவரது உறவினர்களால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பெண் சிகிச்சை பயனளிக்காமையால் நேற்று திங்கட்கிழமை இரவு வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

வரணி கரம்பைக் குறிச்சியை சொந்த இடமாகக் கொண்ட 6 பிள்ளைகளின் தாயாரான திருமதி இரத்தினமலர் சுதாகரன் (வயது 40) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவரைக் கடித்த பாம்பு மக்கள் பார்வைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 07 July 2010 09:02 PM

    நியூசிலாண்டிலும் ஆஸ்திரேலியாவிலும் தேடிதேடி பாம்புகளை கொன்று அங்கே பாம்புகளே இல்லையாம். கிவி பறைவகளை தீண்டாதிருக்கவே இந்நடவடிக்கைஎ டுக்கப்பட்டதாம், பாம்புகள் தீண்டுவதிலிருந்து தப்ப தீபம் போதும்!ஆறுமணிக்குபிறகு வெளிக்கிடக்கூடாதுஎங்கும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .