2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பிரிட்டிஷ் தேர்தலில் கோர்டன் பிரவுன் தோல்வி; டேவிட் கெமரூன் புதிய பிரதமர்?

Super User   / 2010 மே 07 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ்  பொதுத் தேர்தலில் 75 சதவீதமான முடிவுகள் வெளியான நிலையில் 290 ஆசனங்களைப் பெற்று பிரதான  எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் (பழமைப் பேணும்) கட்சி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த டேவிட் கெமரூன் ஏனைய சிறிய கட்சி ஆதரவுடன் பிரதமராக வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பிரதமர் கோர்டன் பிரவுன் தலைமையிலான ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி , சுதந்திர ஜனநாயக கட்சி, பிரிட்டிஷ் நேஷனல் கட்சி என 4 கட்சிகள் தேர்தல் களத்தில் முக்கிய பங்கு வகித்தன.

வாக்கெண்ணும் நடவடிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கன்சர்வேடிவ் கட்சி 290ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உ‌ள்ளது. அடுத்த இடத்தில் உள்ள  தொழிலாளர் கட்சி 246 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை இந்த தேர்தலில் இரு இந்திய வம்சாவழி பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கன்சர்வேடிவ் கட்சி சார்பில் பிரீத்தி பட்டேல், விலாரிவிஸ் (தொழிலாளர் கட்சி) சார்பில் தேர்வு செய்யப்பட்டனர். ஆசியாவில் இருந்து 89 பேர் போட்டியிட்டுள்ளனர். இதில் 15 பேர் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பிரிட்டனில் எடுக்கப்பட்ட எக்சிட் போல் கருத்துக்கணிப்பின்படி கன்சர்வேடிவ் கட்சி 307ஆசனங்களைக் கைப்பற்றும் என்றும் தொழிலாளர் கட்சி 255 ஆசனங்களைக் கைப்பற்றும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆட்சி கட்டிலில் அமர 325 இடங்கள் தேவை. இதனால் சிறு கட்சிகளின் ஆதரவை கன்சர்வேடிவ் கட்சி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுகின்றது. இதன்படி கமரூன் பிரதமராக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் நாட்டை நிர்வகிக்கும் நம்பிக்கையை தொழிலாளர் கட்சி இழந்து விட்டது என கன்சர்வேடிவ் தலைவர் கெமரூன் கூறியுள்ளார். பிரிட்டிஷ் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இந்த மாற்றம் புதிய தலைவரை வரவேற்க தயாராகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 07 May 2010 09:48 PM

    இங்கிலாந்தில் வீதாச்சார முறை தேர்தல் கேட்கின்றார்களாம், விநோதமாக இல்லை? நாமோ அதில் வெறுத்துப்போய்விட்டோம். உண்மையில் தொகுதி வாரி முறை பெரும் பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியது, வன்முறை மிக்கது, வேட்பாளர்கள் கொல்லப்படும் அபாயமும் தேர்தல்கள் தள்ளி வைக்கப்படவும் வேண்டுமென்றே ராஜினாமா செய்து செய்து இடைத்தேர்தல்களை வரவழைப்பதுமாக பல விளையாட்டுக்களைக் கொண்டது. எம்.பி.க்களை கடத்துவது அடைத்து வைப்பது போன்ற இன்னும் ஏராளம். பல மெம்பர் தொகுதி கூட இனத் துவேசத்தை ஏற்படுவதே. கலப்புமுறை என்கின்றனர், பார்ப்போம்.

    Reply : 0       0

    xlntgson Saturday, 08 May 2010 08:46 PM

    அதிகப்படியான இடங்களை பெற்ற கட்சிக்கே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் லிபரல் டெமோக்ரடிக் கட்சிக்காரர்கள் அவ்வாறே முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். உண்மையில் அவர்களால் ஒத்துப்போக முடியாத பட்சத்தில் கலைத்துவிட்டு தேர்தல் வைக்க வேண்டியது தான். அதுவும் தொங்கும் பாராளுமன்றம் என்றால் விகிதாச்சார முறையை தவிர வேறு வழி இல்லை என்றே நினைக்கின்றேன் அவ்வாறாக அல்லாமல் லிபரல் டெமோக்ரடிக் கட்சிக்காரர்கள் மீண்டும் லேபர் ஆட்சிக்கு வழி வகுப்பார்களே. ஆனால் அது ஜனநாயகம் அல்ல சந்தர்ப்பவாதம் கொள்கைகெட்ட நம்மைப்போல்.

    Reply : 0       0

    xlntgson Sunday, 09 May 2010 08:39 PM

    மரபு வாத கட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் லிபரல் டெமோக்ரடிக் என்னும் தாராளப்போக்குடைய ஜனநாயக வாதிகளின் ஆதரவில் ஆட்சி அமையும், ஆனால் கொள்கை ரீதியாக இவ்விரு கட்சிகளும் ஒத்து போகுமா என்பதே பிரச்சினை, இல்லாவிட்டால் சபையை கலைத்துவிட்டு வேறு தேர்தல் நடத்த வேண்டியது வரும். தொழிற்கட்சியும் லிப் டெமோவும் மீண்டும் சேர்ந்து ஆட்சி அமைத்தால் கொள்கை இல்லாக்கூட்டணியாகும். அங்கே வீதாச்சார முறையை அறிமுகப்படுத்த கோரிக்கை வலுவடைய காரணமாகிறது. இலங்கையிலோ விழுக்காட்டுமுறை மிகவும் தாக்கப்படுகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .