2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரதமர் தெரிவுக்கு புதிய யோசனை

Yuganthini   / 2017 ஜூன் 12 , மு.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமரை நேரடியாக தெரிவு செய்வதற்கான யோசனை, புதிய அரசியலமைப்பில், புதுப்பித்து கொள்வதற்கான வரைவு உள்ளடக்கப்பட்டள்ளதாக, நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.   

அதனடிப்படையில், புதிய பிரதமரை நேரடியாக தெரிவு செய்துகொள்வதற்கு, பிரதமர் பதவிக்காக முன்கூட்டியே பெயர் குறிப்பிட்டு வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தற்போதைய முறையிலான, வெஸ்ட்மினிஸ்டர் முறைமையின் கீழ் தெரிவுசெய்தல் ஆகிய யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

அந்த யோசனைகள் தொடர்பில், அரசியலமைப்பு வழிப்படுத்தல் குழுவில் கலந்துரையாடப்படுவதாக அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.   

பிரதமரை தெரிவு செய்தல் உள்ளிட்ட புதிய அரசியலமைப்பில், இற்றைப்படுத்தப்பட்ட வரைவுகள் புதிய பிரிவுடன் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.   
இற்றைப்படுத்தப்பட்ட புதிய வரைவுகள் தொடர்பில், இரண்டு பிரதான கட்சிகளை தவிர ஏனைய சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.   

கூட்டாட்சி அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய, புதிய வரைவுகள் தொடர்பில் எவ்விதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்றும், ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளும் நோக்குடன் அவ்விரு கட்சிகளும் செயற்படுவதாகவும் அறியமுடிகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .