2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாலித ரங்கே பண்டார மீது தாக்குதல்; ஒழுக்காற்று ஆணைக்குழு கலந்துரையாடல்

Super User   / 2010 மே 30 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபயசேகரவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஒழுக்காற்று ஆணைக்குழு நாளை கூடி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

சிலாபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி  இடம்பெற்றிருந்த  கூட்டத்தின்போது, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தாக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாந்த அபயசேகர கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, மேற்படி சம்பவம் தொடர்பில் நாளை கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ள நிலையில்,  சரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை பகிஷ்கரிக்கத் தீர்மானித்திருப்பதாக கடந்த வாரம் பாலித ரங்கே பண்டார தெரிவித்திருந்தார்.

எனினும்,  கட்சியிலிருந்து விலகுவது தொடர்பில் தான் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் அவர்  குறிப்பிட்டிருந்தார்.   அத்துடன்,  தனது ஆசனத்தை உறுதிப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ளதாகவும் பாலித ரங்கே பண்டார கூறியிருந்தார்.

சாந்த அபயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீது  பாலித ரங்கே பண்டார மீண்டும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X