2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்-கெஹலிய ரம்புக்வெல்ல

Super User   / 2010 மே 16 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம்  தயார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் தவறான வழியில் நடத்தியிருப்பதுடன், இதனால் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.

சில சர்வதேச ஊடகங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாக கூறிய அமைச்சர், யுத்தத்தின் பின்னரான இலங்கையின் உண்மை நிலைமை தொடர்பான செய்திகளை தவறாக வெளியிட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

எனவே, புலம்பெயர் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள்  மற்றும் சர்வதேச ஊடகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 16 May 2010 08:30 PM

    கே.பீ.யை தூக்கியது போல் எல்லாரையும் தூக்கிவிடுவோம் என்றார்கள் இப்போது பேச்சுவார்த்தை என்கிறார்கள். அவர்களோ நாடு கடந்த அரசு அமைத்துவிட்டோம். தேர்தலும் நடத்தினோம் என்கிறார்கள். தமிழர் வெளிநாடுகளுக்கு போய் விட்டால் நல்லது என்கிறவர்கள்தான் அரசில் அதிகரித்து வருகின்றனர். சுட்டுவிட்டு சமாதானம் பேசவும் இடித்துவிட்டு மாற்று ஏற்பாடு செய்வதைப்பற்றிப்பேசுவதும். குதிரை பாய்ந்துபோன பின் ஸ்தாலையை மூடுவது போல் இருக்கிறது, நீதி நேர்மை சட்டம் தீர்ப்பு எல்லாம் பாரபட்சமின்றி இருந்தால் போன தமிழர் எல்லாம் வந்துவிடுவர்!

    Reply : 0       0

    KONESWARANSARO Monday, 17 May 2010 02:41 PM

    பாரபட்சமற்ற நீதி இலங்கையில் இருந்தால் போராட்டம் ஏன்? இன அழிப்பு ஏன்? தமிழர்களின் புலப்பெயர்வு ஏன்? நாடுகடந்த அரசு ஏன்? பேச்சுவார்த்தைக்கு ஓடித் திரிவது ஏன்? வேரைத் தேடுங்கள்; விடை கிடைக்கும்.ஏமாற்ற நினைத்தால் ஏமாறுவீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .