2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரபாகரனுக்கு இன்று பிறந்தநாள்: கிளிநொச்சியில் துண்டுப் பிரசுரம்

Kanagaraj   / 2015 நவம்பர் 26 , மு.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61ஆவது பிறந்த தினம் இன்றாகும். இந்நிலையில், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து கிளிநொச்சியில், செவ்வாய்க்கிழமை இரவு துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.

சுண்டிக்குளம் பகுதி ஏ9 வீதியில் வீசப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அதில், சுமார் 50 வரையான துண்டுப் பிரசுரங்கள் இருந்துள்ளன என்று அறியமுடிகின்றது. இந்த துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில் விசாரணைகளை

முன்னெடுத்துவருவதாகவும் பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.  
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பொது நிகழ்வுகளை நடாத்தும் எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றாகாவே இன்னும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இருக்கின்ற நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கோ, அதன் தலைவர்களுக்கோ ஆதரவாக பொது நிகழ்வுகள் நடாத்தப்பட முடியாது என பொலிஸ் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியகட்சகருமான ருவன் குணசேகேர தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நாளை, வீர மரணம் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகோருமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களானால் கூட, போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் உரிமை எவருக்கும் உண்டு என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட தமிழர்களை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தாது, அமைதியான முறையில் நினைவுகூறுமாறு, தான் பொதுமக்களை கேட்டுக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .