2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பாரம்பரியத்தை கண்டறியுங்கள்: மாவட்டச் செயலாளர்களுக்கு பிரதமர் ஆலோசனை

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரம்பரியப் பாடல்கள், உணவு வகைகள், நடைமுறைகள் மற்றும் நாட்டிய - நாடகங்கள் உள்ளிட்ட பாரம்பரிய முறைகள் தொடர்பில் கண்டறிந்து, அவை தொடர்பான அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாவட்டங்களுக்கே உரித்தான பாரம்பரியச் சொத்துக்கள் தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கலாசார அதிகாரிகள் ஒன்றிணைந்து, இந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் எனவும் இதற்குத் தேவையான திட்டமொன்றை வகுக்குமாறும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

உரிய திட்டத்தை கலாசார அமைச்சின் செயலாளர் மற்றும் கலாசாரப் பணிப்பாளர் ஆகியோர் ஒன்றிணைந்து தயாரிக்க வேண்டும் என்றும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X