2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மூடிக்கிடக்கும் வீடுகளுக்கு எதிராக நடவடிக்கை

Editorial   / 2017 ஜூலை 19 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நுழைவதற்கு கடினமான முறையில் மூடிக் காணப்படும் வீடுகள் மற்றும் சொத்துகளினுள் உள்நுழைந்து பரீட்சிப்பதற்கும் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விதிமுறைகளை விதிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசல் முஸ்தபா மற்றும் சட்டமும் ஒழுங்கும், தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நானாயக ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

கொழும்பு மற்றும் சன நெருக்கடி மிகுந்த பிரதேசங்களில், முறையற்ற முறையில் திண்மக் கழிவுகளை அகற்றுவதைத் தடுத்தல் மற்றும் டெங்கு நோய்த் தொற்றல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகளை செயற்படுத்துவது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதன்விவரம் வருமாறு,  

  • முறையற்ற முறையில் கழிவகற்றும் பொது இடங்களை மேற்பார்வை செய்வதற்காக வேண்டி சி.சி.டிவி கெமராக்களை பொருத்துதல் மற்றும் அவற்றில் இருந்து பெறப்படுகின்ற ஒளிப்பதிவுகளை அலைபேசி வாயிலாக கட்டுப்பாட்டறை அதிகாரிகளுக்கு மேற்பார்வை செய்யக் கூடிய செயன்முறையொன்றை தயாரித்தல்.  
  • கொழும்பு மற்றும் சன நெருக்கடி மிகுந்த பிரதேசங்களில் அமைந்துள்ள அனைத்து நிர்மாண கட்டடங்களிலும் அந்நிர்மாண நடவடிக்கைகளின் சட்ட ரீதியான உரிமையாளர், ஒப்பந்தக்காரர் மற்றும் ஏனைய உரிய தகவல்கள் அடங்கிய பெயர் பலகையை தயாரித்தல் அவசியமாகும்.  
  • பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில், இடம் கொடுக்கும் நபர்களுக்கு எதிராக, அவர்களின் பெயர்களிலேயே தனியார் வழக்கு தொடரல்.  
  • உள்நுழைவதற்கு கடினமாக முறையில் மூடி காணப்படும் வீடுகள் மற்றும் சொத்துகளினுள் உள்நுழைந்து பரீட்சிப்பதற்கும் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விதிமுறைகளை விதித்தல்.  
  •  கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும் செயற்படுத்துவதற்கு அவசியமான அதிகாரிகளை அனுமதித்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல்.  

மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை செயற்படுத்துவது தொடர்பில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசல் முஸ்தபா மற்றும் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X