2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்குளியில் நீடிக்கும் பதற்ற நிலை

Super User   / 2010 ஜூலை 05 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்குளி பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ​இடம்பெற்ற மோதலை அடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலைய தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

பொலிஸாருடனான மோதலில் இடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போதைபொருளை மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை மட்டக்குளி பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி இளைஞன் கடுமையாகத் தாக்கபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.  இதனால் அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அறிந்து ஆத்திரம் அடைந்ததாலேயே அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பொலிஸாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு எட்டு மணியளவில் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பிரதேசவாசிகள், அதனை தாக்க முயன்றனர்.

அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸாரும் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்ற நிலைமை நீலவியது. இந்த பதற்ற நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .