2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்குளியில் பதற்றம்;பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சகலரும் இடமாற்றம்

Super User   / 2010 ஜூலை 05 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, மட்டக்குளியில் பொது மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் உத்தரவுக்கமைய இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், மேற்படி சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக தீவிர விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் தலைமை அலுவலகம், குறித்த சம்பவத்தினை அடுத்து கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மற்றும் பொலிஸ் அத்தியட்சர் ஆகியோரும் இடமாற்றப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதான பொலிஸார், சட்டத்தை மீறி நடந்து கொண்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் குறித்த அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றவியல் பொலிஸ் பிரிவினர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 200பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மேலும் 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .