2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மணற்காடு சம்பவம்: அறிக்கையிட யாரும் வரவில்லை

Editorial   / 2017 ஜூலை 13 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணற்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால், இளைஞனொருவன் பலியான சம்பவம் தொடர்பில், அறிக்கையிடுவதற்கு, அந்த கன்டர் ரக வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றியவரோ அல்லது அந்தவாகனத்தில் பயணித்த நபர்களில் யாரேனும் ஒருவரோ, செவ்வாய்க்கிழமை வரையிலும் முன்வரவில்லையென, பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

பருத்தித்துறை, மணற்காட்டுப் பகுதியில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த கன்டர் ரக வானத்தின் மீது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், துன்னாலையைச் சேர்ந்த 24 வயதான யோகராசா தினேஸ் என்ற இளைஞர் பலியானார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம், சம்பவத்தில் பலியான இளைஞனின் உறவினர்கள் உள்ளிட்ட 11 பேர், அறிக்கையிட்டுள்ளனர் என்று அப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மெவன் டி சில்வா தெரிவித்தார்.  

சட்டவிரோதமான முறையில், மணல் ஏற்றிச்செல்பவர்களை கைதுசெய்வதற்காக, கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்றிருந்த வேளையில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி, கன்டர் ரக வாகனம் பயணித்துள்ளது. அதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இளைஞர் பலியானார். 

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அந்த வாகனத்தில், எழுவர் இருந்தனர் என்றும், துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து, சாரதி உட்பட அனைவரும் தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இந்தச் சம்பவத்தையடுத்து, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் உதவிப் பொலிஸ் அதிகாரி கிங்சிலி குணசேகரவின் தலைமையிலான குழுவொன்று, பருத்தித்துறைக்குச் சென்றுள்ளது.  

அந்தக் குழுவின் விசாரணைகளை தொடர்பில் தேடியறிவதற்கும், விசாரணைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேவன் டி சில்வா, அங்கு விரைந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சகல நபர்களிடமும் அறிக்கையைப் பெற்றுக்கொண்டு, பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளை விசாரணைக்குழுவுக்கு, தான் வழங்கியுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேவன் டி சில்வா தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X