2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாணவிகள் மீதான வன்புணர்வைக் கண்டித்து கிழக்கில் தொடர் ஆர்ப்பாட்டங்கள்

Yuganthini   / 2017 ஜூன் 07 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், ஏ.எம்.ஏ.பரீத், எஸ்.கார்த்திகேசு, தீஷான் அஹமட்

திருகோணமலை மல்லிகைத்தீவு, பெரியவெளி கிராமத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் குறித்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குமாறும் வலியுறுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில், ன்று (07) ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில், கதிரவளி அரசினர் வைத்தியசாலை முன்றலில், கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, மல்லிகைத்தீவு சிறுமிகள் மீதான வன்புணர்வு மற்றும் முஸ்லிம்கள் மீதான இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்துஇ மூதூர் மக்களின் ஏற்பாட்டில்இ அமைதிப் பேரணியொன்று நடத்தப்பட்டது. அத்துடன்இ பேரணியில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும்இ மூதூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன், அம்பாறை திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட திருக்கோவில் மெதடிஷன் மிஷன் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களால், திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால், பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேலும்இ மாணவிகள் மீதான வன்புணர்வைக் கண்டித்துஇ தோப்பூரிலும் கண்டனப் பேரணியொன்று நடத்தப்பட்டதுடன்இ கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஹர்த்தாலும் முன்னெடுக்கப்பட்டது.

மல்லிகைத்தீவு, பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில், கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற எட்டு வயதுச் சிறுமிகள் மூவரை, வன்புணர்வுக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .