2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாணவர்களை பாடசாலைக்கு சேர்க்கும் விடயத்தில் கல்வி அமைச்சின் எச்சரிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக்கொண்டால், குறித்த மாணவர்கள் பாடசாலையிலிருந்து நீக்கப்படுவார்களென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து அறவிப்பொன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு, அடுத்த வருடம் அரசாங்க பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றுநிருபத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துகொள்வது குறித்து, கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள, சுற்றுநிருபம் மற்றும் அறிவுரைகளுக்கு அமைய அனைத்து பாடசாலை அதிபர்களும் நடவடிக்​கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளும் விடயத்தில் முறைகேடுகள் காணப்பட்டால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, அந்த முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிபர்கள், அதிகாரிகளிடம் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும், கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கு அறிவித்துள்ளது.

மாணவர்களை ​முதலாம் தரத்துக்கு இணைத்துக்கொண்டு, மாணவர்களின் பெயர்ப்பட்டியலை காட்சிப்படுத்தியதன் பின்பு, தம்மால் கோரப்பட்ட பாடசாலைகள் கிடைக்காத மாணவர்கள் அது குறித்து மேன்முறையீடு செய்யக்கூடிய வகையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வசதிகள் காணப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X