2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மத்திய ஆபிரிக்க சாட் நாட்டில் இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவு

Super User   / 2010 மே 25 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவொன்று ஐ.நா படையுடன் இணைந்து பணிபுரிவதற்காக மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு விரைவில் புறப்பட்டுச் செல்லவுள்ளது.

மூன்று அதிகாரிகள் உட்பட மொத்தம் 61பேர் இந்தப்படைப்பிரிவில் அங்கம் வகிக்கவுள்ளதாக பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை இராணுவப் பிரிவொன்று மத்திய ஆபிரிக்காவுக்குச் செல்வது இதுவே முதற் தடவையாகும்.

இலங்கை இராணுவத்தின் தொழிற்சார் தகைமை மற்றும் அதன் திறமை என்பனவற்றுக்கு ஐ.நா வழங்கியுள்ள அங்கீகாரமாகவே இது கருதப்படுவதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 25 May 2010 09:56 PM

    ஐ.நா படைகளில் பணியாற்ற அமைதி படையாக தகுதி வாய்ந்த இலங்கை படைகள் எவ்வாறு ஐ.நா விசாரணை குழுவில் யுத்த குற்றம் புரிந்ததாக தண்டிக்கப்படவியலும்? ஐ.நா.வின் இந்த விசாரணைக்குழு கண்துடைப்பு அல்லது ஏமாற்று வேலை என்றே நான் நினைக்கிறேன்! கடைசி கட்ட நிகழ்வுகளை அறிந்த ஒருவரும் இல்லை. இருந்தாலும் அவர்கள் ஒருவரும் இப்போது உயிரோடு இல்லை! எஞ்சியவர்களும் விசாரணைக்கு வரப்போவதில்லை. வந்தாலும் அவை நம்பத்தக்கதாக கருதப்படபோவதுமில்லை! வீண் வேலை! இலங்கை இராணுவ மயமாதலில் இருந்து தப்பினால் போதும் உலக சமாதானத்துக்கும் பங்கு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .