2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மீனுக்கான வரி குறைப்பு

Editorial   / 2017 ஜூன் 08 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும், ஈரமான நிலையில் உள்ள மீனுக்கான விசேட பண்ட வரி, 25 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது. 

இந்த நடைமுறை, நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் ஈரமான நிலையில் உள்ள மீனுக்கான விசேட பண்டவரியாக இதுவரையிலும், ஒரு கிலோ கிராமுக்கு 75 ரூபாய் அறவிடப்பட்டுவந்தது. இனி, 50 ரூபாய் மட்டுமே அறவிடப்படும் என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. 

நாட்டில் தற்போது நிலவுகின்ற, அனர்த்த நிலைமைகள் காரணமாக, கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தி குறைத்துள்ளது. ஆகையினால், தேசிய உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலேயே, மீனுக்கான விசேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.  

இலங்கையானது மாதமொன்றுக்கு ஆகக்குறைந்தது 2,000 மெற்றிக்தொன் ஈராமான மீன்கள் இறக்குமதி செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .