2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மெனிக்பாம் நலன்புரி கிராமத்திலுள்ள 7,350பேர் 11 நாட்களில் மீள்குடியேற்றம்

Super User   / 2010 மே 19 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெனிக்பாம் நலன்புரி கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 62,810 இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 7,350பேர் எதிர்வரும் 11 நாட்களில் மீளக்குடியேற்றப்படவுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட கராச்சி மற்றும் கண்டவெளி போன்ற பிரதேசங்களிலேயே இந்த மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

இந்த நடவடிக்கை நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான இணைப்பதிகாரி தெரிவித்தார்.

மெனிக்பாம் நலன்புரி கிராமத்துக்குட்பட்ட 11 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு தொகையினரே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர் என்று தெரிவித்த மேற்படி இணைப்பதிகாரி, குறித்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களின் எண்ணிக்கை ஆறாக குறைக்கப்படும் என்றும் கூறினார்.

அத்துடன், அந்த நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கையும் 55,460ஆக குறைக்கப்படும். அவ்வாறு முகாம்களில் எஞ்சுவோரையும் வெகுவிரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

இதேவேளை மன்னார் பிரதேசத்திலுள்ள நலன்புரி முகாம்கள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .