2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’மீன்களின் உயிரிழப்புக்கு அதிக வெப்பமே காரணம்’

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கும் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில், பெருமளவு மீன்கள் உயிர் இழப்பதற்கு அதிக வெப்பமே காரணம்” என, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.

“அதிக வெப்பமே குறித்த பகுதியின் நீரினை பச்சைநிறமாக மாற்றி பெருமளவு மீன்கள் உயிர் இழப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது. வழமையாக இவ்விடத்தில் நீல நிறத்திலே நீர் காணப்படும்.

“அதிகரித்த வெப்பம் காரணமாக நீர் பச்சை நிறமாக மாற்றமடைந்து பெருமளவு மீன்கள் உயிர் இழந்ததன் காரணமாக, இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் பெருமளவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

“நந்திக் கடல் பெருங்கடலுடன் இணையும் பகுதியிலேயே மீன்களின் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நந்திக் கடலினை ஆழமாக்குங்கள். அப்போதுதான் மீன்களின் பெருக்கம் அதிகரிக்கும் என மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

“நந்திக் கடல் ஆழமாக்கல் இதுவரை இடம் பெறவில்லை. இந்நீரேரியில் குறைவான நீர் மட்டம் உள்ளமையும் மீன்களின் உயிர் இழப்புக்குக் காரணமாக அமைந்து விட்டது. தற்போது வரட்சியினைக் காரணங்காட்டினாலும் கூட நந்திக் கடல் ஆழமாக்கலில்தான் எதிர்கால மீன் பெருக்கம் இடம் பெற வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

“இறந்த மீன்களை அகற்றும் பணியில் கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மீன்களின் உயிரிழப்பு கடற்றொழிலாளர்களைப் பாதித்துள்ளது” எனவும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .