2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மின்விநியோக துண்டிப்பிற்கு முன் சிவப்புநிற ரசீதை அனுப்ப உத்தரவு

Super User   / 2010 மே 13 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தைத் துண்டிப்பதற்கு முன்னர், அது தொடர்பில்  அறிவிக்கும் வகையிலான சிவப்புநிற ரசீதை அனுப்பி வைக்குமாறு மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சினால், இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிவப்புநிற ரசீது அனுப்பி வைப்பதற்கு முன்னரே பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள பாவனையாளர் ஒருவரின் வீட்டுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்தே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பாவனையாளர்கள் சிலருக்கான மின்விநியோகமும் இவ்வாறே எவ்வித அறிவித்தலுமின்றி துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அந்த பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ, குறித்த பாவனையாளர்களின் முறைப்பாடு சரியானது என்றும், சிவப்புநிற ரசீது அனுப்பப்படாமல் மின்விநியோகத்தைத் துண்டிக்க முடியாது என்றும் கூறினார்.







 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X