2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’மீற்றரின்றி ஓட முடியும்’

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்கவில்லையாயின், வண்டிகளில் காணப்படும் மீற்றர்களைக் களற்றி வைத்துவிட்டுப் பயணிக்க நேரிடுமென, இலங்கைச் சுயதொழிலாளர்களின் தேசிய முச்சக்கரவண்டிச் சங்கம் அறிவித்துள்து.

முச்சக்கர வண்டிகளுக்கான உதிரிப் பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்த மேற்படி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன, தம்முடைய பிரச்சினை தொடர்பில், உரிய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ள போதிலும், இதுவரை இப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படவில்லையெனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், முச்சக்கர வண்டிகளிலுள்ள மீற்றர்களைக் களற்றி வைத்துவிட்டு, பயணத்தைத் தொடரவுள்ளதாவும், இந்த நடவடிக்கை, எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமெனவும், அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மேற்படிச் சங்கத்தின் தீர்மானத்துக்கு தாம் ஒருபோதும் இணங்கப்போவதில்லையென, அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்மதது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேற்படி அகில இலங்கை முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக், முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர்கள் தொடர்பில், உரிய ஒழுங்குமுறையொன்று பேணப்பட வேண்டுமென்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .