2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மூலோபாய சட்டகத்தை ஏற்றுக்கொள்ள அங்கிகாரம்

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஏற்படும் திடீர் விபத்துகளை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய கொள்கை மற்றும் மூலோபாயச் சட்டகத்தை ஏற்றுக்கொள்வதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.

இலங்கையில் ஏற்படும் திடீர் விபத்துகளால், வருடாந்தம் பல மில்லியன் கணக்கானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதுடன், சுகாதாரத் துறைக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பாலானவற்றை, அவற்றுக்கே செலவிடவேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

திடீர் விபத்துகளுக்குப் பிரதான காரணமாக, வீதி விபத்துகள் கருதப்படுகின்றன. விபத்துக்கு உள்ளாகுபவர்களில் அதிகமானோர், 15 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலைமையைத் தடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள, இலங்கையில் திடீர் விபத்துகள் காரணமாக ஏற்படும் அபாயங்களை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய கொள்கை மற்றும் மூலோபாய சட்டகத்தை ஏற்றுக்கொள்வதற்கும் அக்கொள்கையையும் மூலோபாயங்களையும் செயற்படுத்துவதற்குத் தேவையான அரசியல் மற்றும் நிர்வாக ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும், அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே, அமைச்சரவையின் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X